என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சிசுஉத்சவ்' நிகழ்ச்சி - 700 குழந்தைகள் பங்கேற்பு
- விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
- மழை நடனம், சாகசப் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.
திருப்பூர் :
திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில், 'சிசுஉத்சவ்' நிகழ்ச்சி 8வது ஆண்டாக கொண்டாடப்பட்டது.
இதில், மாவட்டத்தை சேர்ந்த, 700க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பாட்டு, நடனம், சமையல், கதை சொல்லுதல், கணிதத் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலான போட்டி, யோகா, வாசித்தல், அறிவை சோதித்தல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
விழாவின் ஒரு பகுதியாக, மழை நடனம், சாகசப் பூங்கா, மேஜிக், உருவப்படம் வரைதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன், பிரன்ட்லைன் குழு பள்ளிகளின் முதல்வர்கள் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்."