என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பி.ஏ.பி.,4ம் மண்டல பாசனத்திற்காக திருமூர்த்தி அணையில் நீர் சேகரிப்பு
- திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து நீர் வழங்கப்படுகிறது.விடுபட்ட பகுதிகளில் காண்டூர் கால்வாய், பிரதான கால்வாய் புதுப்பிக்கும் பணி மற்றும் பருவ மழைகள் ஏமாற்றியது உள்ளிட்ட காரணங்களினால் நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறப்பது தாமதமாகியுள்ளது.
இந்நிலையில் 4ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து 68 ஏக்கர் நிலங்களுக்கு நீர் திறக்க திட்டமிடப்பட்டது.திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் ஒரு சுற்று நீர் வழங்க அதிகாரிகள், திட்ட குழு ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள 60 அடியில் 44.82 அடியாகவும், மொத்த கொள்ளளவான 1,935.25 மில்லியன் கனஅடியில் 1,322.93 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது.அணைக்கு காண்டூர் கால்வாய் வழியாக வினாடிக்கு 821 கனஅடி நீர்வரத்து இருந்தது. குடிநீர், இழப்பு என 25 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டிருந்தது.
அதிகாரிகள் கூறுகையில், நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கும் வகையில் திருமூர்த்தி அணையில் நீர் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற 20-ந்தேதி, நீர்மட்டம் 54 அடி வரை உயர வாய்ப்புள்ளது. ஒரு சுற்றுக்கு, 1,900 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும். பருவ மழை, அணைகள் நீர் இருப்பை பொருத்து கூடுதல் சுற்றுக்கள் நீர் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்