என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அலகுமலையில் ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அகற்ற கலெக்டர் உத்தரவு
Byமாலை மலர்28 July 2022 12:52 PM IST
- அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது.
- நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் :
பொங்கலூர் அலகுமலை அடிவாரத்தில் மந்தை வெளி புறம்போக்கு நிலம் உள்ளது. அந்நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. தொங்குட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மந்தை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளார் என மலைப்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததன் பேரில் நில அளவை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
கோர்ட்டு உத்தரவின் பேரில் நில அளவை செய்யப்பட்டதில் மந்தை புறம்போக்கில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால் நாளை 29-ந் தேதிக்குள் கட்டடங்களை அகற்றி, மந்தை புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என்று திருப்பூர் தெற்கு தாசில்தார் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனருக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×