search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகை பிடிக்க மாட்டோம் என கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி
    X

    உறுதிமொழி எடுத்துக்கொண்ட கல்லூரி மாணவர்கள்.

    புகை பிடிக்க மாட்டோம் என கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

    • ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    • 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    புகை பிடிக்காத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையமும் இணைந்து ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், நிலைய துணை மேலாளார் (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசக குழு உறுப்பினர் சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    மாணவச் செயலர்கள் சுந்தரம், காமராஜ், பூபாலன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை என் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இதனால் அருகாமையில் இருப்பவர்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வேன் போன்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    Next Story
    ×