என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காங்கயத்தில் சமுதாய வளைகாப்பு விழா
- தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சொந்த நிதியிலிருந்து ரூ.1,000மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.
- பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கயம் :
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர். அ.லட்சுமணன் தலைமையில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் காங்கயம் பழனியப்பா திருமண மண்டபத்தில் 180 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு விழாவினை தொடங்கி வைத்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1,000-மும், வேட்டி, சேலைகளையும் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) ஸ்டெல்லா, தி.மு.க. பிரமுகர்களான குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், தி.மு.க. யூனியன் கவுன்சிலர் ரவி, கவுன்சிலர் செல்வம் ராமசாமி, படியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முக சுந்தரம், காங்கயம் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மோகனசெல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.