search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை - விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச்சென்றனர்
    X

    கொள்ளை நடந்த கடைகளையும், போலீசார் விசாரணை நடத்துவதையும் படத்தில் காணலாம். 

    திருப்பூரில் அடுத்தடுத்து 5 கடைகளில் கொள்ளை - விலை உயர்ந்த பொருட்களை அள்ளிச்சென்றனர்

    • 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது.
    • திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் மேற்கு பிரதான சாலையில் 6 கடைகளை கொண்ட தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை கடை, துணிக்கடை, பேன்சி கடை, இ சேவை மையம் மற்றும் முடி திருத்தகம் என 5 கடைகள் செயல்பட்டு வருகிறது .ஒரு கடை காலியாக உள்ளது.

    இதே வீதியில் திருப்பூர் மத்திய காவல் நிலையம் சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் .இதில் மளிகை கடையில் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை எடுத்து சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு விட்டு சென்றுள்ளனர். மேலும் கடைகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.

    இன்று காலை கடையை திறக்க உரிமையாளர்கள் வந்த போது அனைத்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளை போனது தெரியவந்தது .

    இதனையடுத்து கடை உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். மத்திய காவல் நிலையம் அமைந்துள்ள அதே வீதியில் சிறிது தூர இடைவெளியில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×