search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் அதிகரிக்கும் கொரோனா - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் அதிகரிக்கும் கொரோனா - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    • மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது .
    • மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பூர்,ஏப்.27-

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமை ப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது . இதன் மூலம் தொற்று பரவல் சதவீதத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதனால் வேலை தேடி வெளிமாநிலத்தில் இருந்து பலர் திருப்பூர் வருவதாலும், பலர் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்வதாலும் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.

    இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடி க்கைகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ள்ளனர். மேலும் வெளி யிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×