search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள், கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
    X

    உயிரிழந்த கோழிக்குஞ்சுகள். சேதமாகியுள்ள கோழிப் பண்ணையின் மேற்கூரைகளை படத்தில் காணலாம்.

    உடுமலையில் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள், கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

    • 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
    • ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சாமராயப்பட்டி, பாப்பான்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சாமராயப்பட்டி கிராமத்தில் விவசாயி சபரிஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 350 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணை பலத்த சேதம் அடைந்தது. மேலும் சூறாவளி காற்றால் கோழிப் பண்ணையின் மேற்கூரைகள் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது .கோழி பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சாமராயபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் இது வரை பார்க்காத வண்ணம் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .ஆயிரக்கணக்கான கோழிகளும் பரிதாபமாக உயிரிழந்தன . ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள் மற்றும் கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    Next Story
    ×