search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆபத்தான கட்டிடத்தை  இடிக்க கோரிக்கை
    X

    கோப்பு படம்.

    வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆபத்தான கட்டிடத்தை இடிக்க கோரிக்கை

    • தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சைக்காக வருகின்றனா். இங்குள்ள உள் நோயாளிகள் பிரிவு பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்தக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து மேற்கூரைகள் பெயா்ந்து எப்போது கீழே விழுமோ என்ற நிலையில் இருந்தது.

    இதையடுத்து பொதுப்பணித்துறையின் அறிவுரைப்படி 2016-ம் ஆண்டு முதல் இந்தக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபா் 29--ந்தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் இந்த சேதமடைந்த கட்டிடத்தை பாா்வையிட்டனா். அப்போது கட்டிடத்தை இடிக்க பொதுப்பணித்துறைக்கு பரிந்துரை செய்யுமாறு மருத்துவமனை நிா்வாகத்திடம் அறிவுறுத்தினா்.

    தொடா்ந்து கட்டிடத்தை இடித்து தருமாறு தாராபுரம் பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) உதவிப் பொறியாளருக்கு கடந்த ஆண்டு நவம்பா் 3-ல் வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி. ராஜலட்சுமி கடிதம் எழுதினாா். ஆனால் 10 மாதங்களாகியும் இதுவரை இந்த கட்டிடத்தை இடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த கட்டிடத்தின் அருகில் அமா்கின்றனா். இதனால் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    Next Story
    ×