search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா், தாராபுரம், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர்  சோ்க்கை
    X

    கோப்பு படம்.

    திருப்பூா், தாராபுரம், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சோ்க்கை

    • அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
    • பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்

    திருப்பூர்:

    திருப்பூா், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:-

    திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் செயல்பட்டு வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு கடந்த மே 24 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில், எட்டாம் வகுப்பு தோ்ச்சி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு பொறியியல் பிரிவுகள், மேம்பட்ட தொழில் நுட்ப படிப்பான மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சோ்ந்து பயிற்சி பெறலாம். ஒரு குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு டூல் கிட் விலையில்லாமல் வழங்கப்படும். அரசுப் பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் பயின்று இந்தப் பயிற்சியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண்திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 கூடுதலாகப் பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பயிற்சியாளா்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.

    ஆகவே, விருப்பமுள்ள மாணவ, மாணவியா் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலையில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2429201, 04258 - 230307, 04252 - 22334 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×