search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் -  பல்லடம் நகரசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தில் பங்கேற்றவர்கள். 

    பாசன கால்வாயில் கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் - பல்லடம் நகரசபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்

    • பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
    • மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் தற்போது கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் நகராட்சியில் வார்டு எண் - 6 க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி,தலைமை வகித்தார்.நகராட்சி வருவாய் ஆய்வாளர் பிரகாஷ்,சுகாதார ஆய்வாளர் சங்கர்,பணி மேற்பார்வையாளர் ராசு,கணக்காளர் சசிகுமார், மற்றும் வார்டு பொதுமக்கள், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில்,கரையான்புதூர் சக்தி நகரில், கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும், கிருஷ்ணா நகர் பகுதியில் போர்வெல், அமைத்து சப்பை தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும், கரையான் புதூரில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், ராயர்பாளையம் மயானத்திற்கு போர் வசதி செய்து தர வேண்டும், பாசன வாய்க்காலில் கோழிக் கழிவுகள் போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை அருகே அமைய உள்ள மின் மயானத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதே போல வார்டு எண் 7-க்கான நகரசபை கூட்டம் ராயர்பாளையம் மாரியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நகர் மன்ற உறுப்பினர் கனகுமணி துரைக்கண்ணன் தலைமை வகித்தார்.நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அபிராமி நகரில் தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர வேண்டும் ராயர்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பராமரிக்க வேண்டும், தெருவிளக்குகள் பழுதடைந்ததை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், பச்சாபாளையத்தில் நீர்நிலை அருகே மின் மயானத்தை அமைக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×