search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மானிய விலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்
    X

    கோப்புபடம்.

    மானிய விலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

    • மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது.
    • சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த தளியில் உள்ள தென்னை மகத்துவ மையமானது விவசாயிகளுக்கு தரமான தென்னை நாற்றுகளை உற்பத்தி செய்து வினிேயாகம் செய்தல், பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்தல், விஞ்ஞான ரீதியாக தென்னை சாகுபடி முறைகளை செயல் விளக்கம் செய்து காண்பித்தல் மற்–றும் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்கள் தொடங்க தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற நோக்கங்களுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்த மையத்தின் செயல் விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் 23 ஆயிரம் மேற்கு கடற்கரை நெட்டை மற்றும் ஆயிரத்து 300 மலேசியன் ஆரஞ்சு குட்டை, பச்சை குட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது. ஒரு நெட்டை ரக தென்னங்கன்றின் விலை ரூ.80-க்கும், குட்டை ரக கன்றின் விலை ரூ.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தென்னங்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் 04252-265430 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அலுவலக வேலை நாட்களில் தென்னங்கன்றுகளை வாங்கிச்செல்லலாம். தென்னங்கன்றுகள் வாங்கிச் செல்லும் போதே பரப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படுகிறது. குறைந்தது 0.1 ஹெக்டர் முதல் அதிகபட்சமாக நான்கு ஹெக்டேர் வரை அதாவது 15 கன்றுகள் முதல் 700 தென்னங்கன்று வரை ஒரு விவசாயி பெற்று பயன் அடையலாம்.

    ஒரு ஹெக்டேர் குட்டை ரக கன்றுகளுக்கு ரூ.7ஆயிரத்து 500-ம் நெட்டை ரக கன்றுகளுக்கு ரூ.6 ஆயிரத்து 500-ம் இரண்டு தவணைகளாக பிரித்து விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக சென்னை தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் மூலமாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் மானிய விலையில் தென்னங்கன்றுகளை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்று தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ஜி.ரகோத்தமன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×