search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களை ஊக்குவித்த கலெக்டர்
    X
    மாணவர்களை கலெக்டர் ஊக்கப்படுத்திய காட்சி.

    போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களை ஊக்குவித்த கலெக்டர்

    • தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.
    • போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. தற்போது குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது. தினமும் 120 மாணவ-மாணவிகள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பயிற்சி வகுப்புக்கு சென்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடினார். போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்து அறிவுரை வழங்கினார். மாதிரி தேர்வுகளை அதிகம் எழுத வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தின் 7-வது மாடியில் அறை எண்.713-ல் செயல்படும் நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். இங்கு தினமும் 60 பேர் புத்தகங்களை தேர்வு செய்து படித்து தயாராகி வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர், தான் தினமும் சென்னை கன்னிமாரா நூலகத்துக்கு சென்று போட்டித்தேர்வுக்கு தயாரான அனுபவத்தை அவர்களிடம் பகிர்ந்தார்.

    போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு தேவையானவற்றை தெரிவித்தால் செய்து கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார். இதில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சுரேஷ் உடனிருந்தார்.

    Next Story
    ×