என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதிய ஆர்டர்களால் சூடுபிடிக்கும் உள்நாட்டு ஆடை உற்பத்தி - விற்பனை
- வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர்.
- கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது.
திருப்பூர் :
வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும ல்லாது, நடுத்தர வயதினரும், வயதானவர்களும், டி-சர்ட், பனியன், ஷார்ட்ஸ் என பனியன் ஆடைகள் அணிவதையே விரும்புகின்றனர்.உள்ளாடைகள் மட்டும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு சென்ற நிலை மாறியது. பனியன் ஆடைகளும் அதிகம் விற்கப்படுகிறது. தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் விற்பனை பாதிக்கப்பட்டதால், புதிய ஆர்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு, கேரளா, புனே, லூதியானா போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளின் கொள்முதலும் குறைந்திருந்தது. கையிருப்பு ஆடைகள் தீர்ந்துவிட்டதால் புதிய ஆர்டர் விசாரணையும், வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் காதர்பேட்டை வளாகத்தில் உள்ள பனியன் வியாபாரிகளுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆர்டர் கொடுக்கின்றனர். அவ்வப்போது நேரில் வந்து மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். நூல்விலை உயர்வால் கடந்த ஆண்டு முழுவதும் சோர்ந்து போயிருந்த காதர்பேட்டை வியாபாரம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாக, நூல்விலை குறைவான நிலையில் தொடர்கிறது. புதிய ஆர்டர் விசாரணையும், கொள்முதலும் அதிகரித்து ள்ளது. இதன்காரணமாக உள்நாட்டு பனியன் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பனியன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கிற்கு பின் திருப்பூர் பனியன் ஆடை வியாபாரம் குறைந்தது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட நூல் விலை உயர்வால் வியாபாரமில்லாமல் பல கடைகள் மூடப்பட்டன.வியாபாரம் மிகக்குறைவாக நடந்து வந்தது. தற்போது, வடமாநிலங்களிலும் கேரள சந்தையிலும் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபார விசாரணை அதிகரித்துள்ளது.நூல்விலை சீராக இருப்பதால், விளையாட்டு சீருடைகள், உள்ளாடைகள், குழந்தைகள் ஆடைகள் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. உள்நாட்டு பனியன் வியாபாரத்தை பொறுத்தவரை நூல்விலை இதேநிலையில் இருந்தால் போதும். மேலும் சில மாதங்களில் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்