search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிராய்லர் கோழி பற்றி தவறான தகவல்களை நம்ப வேண்டாம் - கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய  தலைவர்  அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    பிராய்லர் கோழி பற்றி தவறான தகவல்களை நம்ப வேண்டாம் - கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய தலைவர் அறிவுறுத்தல்

    • பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
    • இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

    திருப்பூர்:

    பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி மற்றும் -பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில், நடந்த இக்கருத்தரங்கில் நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேசியதாவது:-

    பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. கோழிகளின் இறைச்சி மற்றும் எடை அதிகரிப்புக்காக, ஊசி செலுத்துவது குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

    நமது குழந்தைகளுக்கு, அம்மை நோய் மற்றும் போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவது போல், இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.

    நாட்டுக்கோழிகளில் அதிக சத்து இருப்பதாகவும், பிராய்லர் கோழிகளில் சத்து இல்லை என்றும் மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நாட்டுக்கோழிகள் அதிக நாட்கள் வளரக்கூடியவை. இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது. சத்துக்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×