என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்நுகர்வோர் ஆதார் விவரத்தை இணைக்க புதிய இணையதள வசதி
- தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம்.
- மின் இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம்.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்சார வாரியம், மின்நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு, ஆதார் இணைக்கலாம் என மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் வரும் குறுஞ்செய்தியில், இதுதொடர்பான அரசாணை தேதியும், ஆதார் இணைப்புக்கான இணையதள முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்நுகர்வோர், https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று, மின் இணைப்பு எண்ணை பதிவிடலாம். பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண் வாயிலாக, உரிமையாளர் சரிபார்க்கப்படுகின்றனர். அதற்கு பிறகு, ஆதார் எண்ணை பதிவு செய்து, அதன் போட்டோவை பதிவேற்றம் செய்ய வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வாங்கிய உரிமையாளர், தங்கள் பெயருக்கு மின் இணைப்பை மாற்றாமல் இருந்தாலும், புதிய உரிமையாளரின் ஆதார் எண்ணை பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யாமல் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. எனவே ஆதார் இணைக்க வசதியாகவும், பெயர் மாற்ற ஏதுவாகவும், சிறப்பு முகாம்கள் நடத்திட மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.