என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவிநாசி-தாராபுரத்தில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது
- மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
- மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும்.
அவிநாசி :
அவிநாசியில் மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 12-ந்தேதி(புதன்கிழமை) நடைபெற உள்ளது. அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்துகொண்டு, மின் நுகா்வோா் குறைகளைக் கேட்டறியவுள்ளாா்.
எனவே அவிநாசி கோட்ட மின்நுகா்வோா் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று அவிநாசி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் பி.பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.
தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பல்லடம் மின்பகிர்மான வட்டம் தாராபுரம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) பல்லடம் மின்பகிர்மான வட்டம் பல்லடம் மேற்பார்வைப்பொறியாளர் தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதேசமயம் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்களை நேரில் கொடுத்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.