என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின் கட்டணம் உயர்வு விசைத்தறியாளர்கள் முக்கிய முடிவு
- கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்கத்தில் மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மங்கலம் சங்க தலைவர் ஏ.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் ,மங்கலம் சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யை இன்னும் இரண்டு தினங்களில் நேரில் சந்தித்து சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லக்கோரியும், உடனடியாக மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் விசைத்தறி கூட்டுக்கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.