search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ-ஷ்ராம் திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பதிவு
    X

    கோப்புபடம்.

    இ-ஷ்ராம் திட்டத்தில் தூய்மை பணியாளர்கள் பதிவு

    • பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
    • அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது.

    அவிநாசி :

    அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் இ-ஷ்ராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது.

    பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, நடைபாதை வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர் வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள், இணைய தளத்தில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் முகாம் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×