search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்  9-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் 9-ந் தேதி நடக்கிறது

    • ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3100 வழங்கப்படுகிறது.
    • இது தொடர்பான விவரங்களை 97885-47625 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வருகிற 9-ந் தேதி ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகள் இன்றி செய்யப்படும். இந்த சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.3100 வழங்கப்படுகிறது.

    இந்த சிகிச்சை மேற்கொள்வதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கோ அல்லது கடின உழைப்பிற்கோ தடை ஏதும் இல்லை. பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையினை விட பல மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. பக்க விளைவுகள் எதுவும் இல்லாத இந்த சிகிச்சை முறையினை ஏற்று பயன்பெற தகுதிவாய்ந்தவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை 97885-47625 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×