search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னவெங்காயம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    சின்னவெங்காயம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது.
    • வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.10க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இங்கு உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோவை, பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தவிர ஏற்றுமதி தரமுள்ள வெங்காயம் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரித்தது.

    இதன் காரணமாக உற்பத்தியும் பலமடங்கு அதிகரித்தது. இதனால் கடந்த சுமார் ஒரு வருட காலமாக சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிவடைந்து கிலோ ரூ.10-க்கும் கீழே கொள்முதல் செய்யப்பட்டது. முதல் தரமான வெங்காயம் கிலோ ரூ.8-க்கும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் கிலோ ரூ.6, ரூ.4 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்து விளைவித்த வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கேட்பாறின்றி கிடந்து அழுகிப் போனது. இதனால் பல இடங்களில் அறுவடையே செய்யாமல் காட்டுடன் ஊழுது விட்டனர். எப்போது விலை உயரும் எனத் தெரியாமல் தவித்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்தனர். ஏராளமான விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய வெங்காயம் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி முதல் தர சின்ன வெங்காயம் ரூ.65 வரையிலும் 2 மற்றும் 3-ம் தர வெங்காயம் முறையே ரூ.40,45-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதுபற்றி வெங்காய வியாபாரிகள் கூறுகையில்"மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில வாரங்களில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வகையில் விலையேற்றம் இருக்கும் என்றனர்.

    Next Story
    ×