என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விலை உயர்வால் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்
- தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
- சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தக்காளி, வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தநிலையில், போதிய விலை கிடைக்காததால் சமீப காலங்களாக அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இந்தநிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சொட்டுநீர்ப் பாசனத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக உள்ளது. சின்ன வெங்காய விதையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்துவிதமான இடுபொருட்களும் விலை உயர்ந்துள்ளது.அந்தவகையில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொண்டுள்ளோம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பாசன நீரின் தேவை குறைகிறது. மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டுநீருடன் கலந்து வழங்கும் போது, குறைந்த அளவு பயன்பாட்டில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.
ஆனால் விவசாய விளைபொருட்கள் விலை உயர்வு என்பது மட்டும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறுவது வேதனை தருகிறது.தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்கிறது.
அதுபோல தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் விலை குறையும் போது ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதன்மூலம் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறும் நிலையை மாற்ற உதவும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்