என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோழிக்கொண்டை பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
- 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.
- ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.
பல்லடம் :
பல்லடம் சுற்று வட்டாரப் பகுதிகளான கணபதிபாளையம், கள்ளகிணறு,ஆலூத்துப்பாளையம், இலவந்தி, சித்தம்பலம், உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. ஒரு ஏக்கருக்கு சொட்டு நீர் பாசனத்தில் கோழிக்கொண்டை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். இதில் ஏக்கருக்கு 1000 கிலோ முதல்2000 கிலோ வரை பூக்கள் அறுவடை செய்யலாம்.
கோழிக்கொண்டைப்பூக்கள் சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் செடிகளில் பூக்கும். சம்பங்கி, செண்டுமல்லி ஆகிய பூ மாலைகளுக்கு அழகு சேர்க்க கோழிக்கொண்டை பூக்கள் பயன்படுகிறது. பல்லடம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கோழிக்கொண்டைப்பூக்கள் திருப்பூர் மற்றும் கோவை பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்த நிலையில் ரோஜா பூக்களின் உற்பத்தி அதிகரித்ததால் கோழி கொண்டை பூ விற்கான தேவை குறைந்து விலை சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோழி கொண்டை பூ விவசாயிகள் கூறுகையில், முன்பு முகூர்த்த காலங்களில் கிலோ ரூ.60 க்கு விற்ற கோழி கொண்டை பூ தற்போது ரூ.30,ஆக சரிந்து விட்டது.மேலும் தற்பொழுது ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது.ரோஜாவை வைத்து மாலை கட்டும் பொழுது 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இதனால் கோழிகொண்டை பூவுக்கான தேவை குறைந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மேலும் தற்போது கோழிகொண்டை பூ வாங்க வியாபாரிகள் முன் வராததால், பல வாரங்கள் பராமரித்து வளர்த்த செடிகளில் பூத்து குலுங்கும் பூக்கள், தற்போது செடியோடு கருகும் நிலையில் உள்ளது இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு சுமார் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.