என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது
- அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்பதால், விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளை தெரிவித்து, அதனை நிவா்த்தி செய்துகொள்ளலாம்.
- வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அறை எண் 20ல் ஆகஸ்ட் 30ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்பதால், விவசாயிகள் விவசாயம் தொடா்பான குறைகளை தெரிவித்து, அதனை நிவா்த்தி செய்துகொள்ளலாம். மேலும் கூட்டத்தில் வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா் பாசன வேளாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் வேளாண் மற்றும் உழவா் நலத் துறை மற்றும் வேளாண் சாா்ந்த துறைகளால் அமைக்கப்பட்டுள்ள கருத்து காட்சியிலும் கலந்துகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.