search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழிகளை தாக்கும் நோய்களால் மூடப்படும் பண்ணைகள்
    X

    கோப்புபடம்

    கோழிகளை தாக்கும் நோய்களால் மூடப்படும் பண்ணைகள்

    • கிலோ 350 முதல் 400 ரூபாய் வரை விலை போனது.
    • ரத்த கழிச்சல், வெள்ளை கழிச்சல் ,பச்சை கழிச்சல் போன்ற நோய் தாக்கி இறக்கும் கோழிகளை சிலர் திறந்த வெளியில் நீர் நிலைகளில் வீசுகின்றனர்.

    திருப்பூர்:

    கோழிகளை தாக்கும் கொள்ளை நோய்களால் பல நாட்டு கோழி பண்ணைகள் துவங்கிய வேகத்தில் மூடப்படுகின்றன. இதனால் நாட்டு கோழி வளர்ப்பில் விவசாயிகள் பெரிய அளவில் சோபிக்க முடிவதில்லை.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    திறந்த வெளியில் வளர்வதால் ஆபத்து அதிகம். கிலோ 350 முதல் 400 ரூபாய் வரை விலை போனது. பி.ஏ.பி., பாசனம் நடந்த போது நோய் தாக்கிய பண்ணை கோழிகள் தண்ணீரில் வீசப்பட்டதால் நோய் பரவி பல ஆயிரம் கோழிகள் இறந்தன.தட்டுப்பாடு காரணமாக இன்று கிலோ 500 ரூபாய்க்கு விலை போகிறது. நாட்டு கோழிகளுக்கு அம்மை, சளி, வெள்ளை கழிச்சல் நோய்கள் தான் பேரிழப்பை ஏற்படுத்தும்.

    குறிப்பாக ரத்த கழிச்சல், வெள்ளை கழிச்சல் ,பச்சை கழிச்சல் போன்ற நோய் தாக்கி இறக்கும் கோழிகளை சிலர் திறந்த வெளியில் நீர் நிலைகளில் வீசுகின்றனர்.இதனால் நோய் பரவி கோழிகளை காவுவாங்குகிறது. இறந்த கோழிகளை திறந்த வெளியில் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×