search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாரான  தீயணைப்பு வீரர்கள்
    X

    கோப்பு படம்

    தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயாரான தீயணைப்பு வீரர்கள்

    • பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
    • மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை ,பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பருவமழை இன்னும் துவங்கவில்லை. மழை பொழிவு துவங்கினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் நீர் புகுவது, வெள்ளத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கும். எனவே மழை காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், தீயணைப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர். மழை காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றனர்.

    மழை பெய்யும் போது மரத்தடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். நீர்வரத்தை அறியாமல் ஆறு, ஓடைகளில் நிற்பதையும், நீர்வழித்தடங்களில் வாகனங்களில் கடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும். வீடுகளில் ஈரமான சுவற்றில் உள்ள மின் சுவிட்ச்களை பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தென்மேற்கு பருவமழை காலத்தில், பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், மீட்பு பணிகளுக்காக வாகனங்கள் மற்றும் இதர கருவிகளை தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உடுமலை தீயணைப்பு மீட்பு நிலையத்தில், மீட்பு பணிகளுக்கான வாகனங்கள் மற்றும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் மற்றும் பணியாளர்கள், கருவிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தனர்.

    Next Story
    ×