search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி ரசாயன சிலைகளை கரைக்க தடை
    X

    கோப்புபடம்.

    விநாயகர் சதுர்த்தி ரசாயன சிலைகளை கரைக்க தடை

    • விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • விநாயகர் சிலை வைக்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். எஸ்.பி., சசாங் சாய், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொதுசெயலாளர் கிேஷார்குமார், மாநில செயலாளர்கள் சேவுகன், சண்முகம், கோட்ட செயலாளர்கள் மோகன சுந்தரம், கோவிந்தராஜ் மற்றும் இதர இந்து அமைப்பினர் பங்கேற்று பேசினர்.

    விநாயகர் சிலை வைக்க ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். விசர்ஜன ஊர்வல நாளில் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும். வழக்கமான பாதைகளில் ஊர்வலம் நடத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால் ரோடு உயரமாகியுள்ளது. சில இடங்களில், மின்கம்பிகள் தாழ்வாக செல்வதை சரிசெய்து கொடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் நீர்நிலைகளில், சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    இயற்கை நீர்நிலைகளுக்கு கேடு விளைவிக்கும் ரசாயன சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாதென கோரிக்கை வைக்கப்பட்டது. கலெக்டர் வினீத் பேசுகையில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய மாநகர போலீசில் உதவி கமிஷனரிடமும், மற்ற பகுதிகளில் ஆர்.டி.ஓ., அலுவலகத்திலும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். சுற்றுச்சூழலை பாதிக்காத களிமண் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.'பிளாஸ்டர் ஆப் பாரீஸ்' ரசாயன சிலைகளை பயன்படுத்தக்கூடாது. சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை கொண்ட பந்தல், பக்கவாட்டு தடுப்பு அமைக்க கூடாது. சதுர்த்தி விழாவை அமைதியாக நடத்திட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    Next Story
    ×