என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்
    X

    அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் போராட்டம்

    • தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தாராபுரம் :

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டியக்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிபிஎஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.நவீன் தலைமை வகித்தாா்.

    இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன் பேசியதாவது:- இந்தியாவில் ராஜஸ்தான், சட்டீஸ்கா் பிகாா், ஜாா்கண்ட் மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறாா்.திமுக கட்சிஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் கடந்த தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆகவே, தோ்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.இந்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×