search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடை காலிப்பணியிடங்கள் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட்  பதிவிறக்கம் செய்யலாம் - கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தகவல்
    X

    கோப்புபடம்.

    ரேஷன் கடை காலிப்பணியிடங்கள் இணையதளம் மூலம் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் - கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தகவல்

    • அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஆள்சேர்ப்பு நிலைய தலைவருமான சொ.சீனிவாசன் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதி பெற்ற வி்ண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரு–கிற 15-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை–யும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 22-ந் தேதியும் திருப்பூர் பல்லடம் ரோட்டில் சின்னகரை பகுதியில் பார்க் கல்லூரியில் (தன்னாட்சி) நடைபெற உள்ளது.

    எனவே நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டு திருப்பூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் (www.drbtiruppur.net) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நேர்முகத்தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதி, முன்னுரிமை தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான அசல் மற்றும் சுய ஒப்பமிட்ட 2 நகல்கள், 2 பாஸ்–போர்ட் அளவு புகைப்படம், விண்ணப்பக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சமர்ப்பிப்பதுடன் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    மேலும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் 0421-2971173 மற்றும் drbtiruppur2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×