search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.காம், ஆங்கில பாடங்களுக்கு கடும் போட்டி - திருப்பூர் அரசு கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்
    X

    கோப்புபடம்.

    பி.காம், ஆங்கில பாடங்களுக்கு கடும் போட்டி - திருப்பூர் அரசு கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வம்

    • தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • அசல் மாற்றுச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லுாரிகளில், கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சிக்கண்ணா கல்லுாரியில் வரும் 10ம் தேதியும், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வரும் 8ம் தேதியும் கலந்தாய்வு துவங்குகிறது.இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் வரும் 10ம் தேதி துவங்கி, 17 வரை நடக்கிறது. விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தி–னரின் குழந்தைகள் தேசிய மாணவர்படை ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும் 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆடை வடிவமைப்பு நாகரிகம் பாடப்பிரிவிற்கும், கலந்தாய்வு நடக்கும். வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை, 750 வரையிலான கலந்தாய்வு வரும் 11ல் நடக்கிறது. வரும் 12ம் தேதி, 751 முதல், 1,400 வரையிலும் நடக்கிறது.அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு, தரவரிசை, 700 வரையில், வரும் 13ம் தேதி நடக்கிறது.மேலும், 701 முதல், 1,400 வரையில் வரும் 16ல் நடக்கிறது. வரும் 17ம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு முதல், 1000 பேருக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கும். இதுகுறித்த விவரங்கள், மாணவர்களின் இ மெயில், மொபைல் எண்ணிற்கு வரும். இதுகுறித்து சிக்க–ண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:- கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழ் அவசியம். மாற்றுச்சான்றிதழ், சாதி–ச்சான்றிதழ், சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அவசியம் எடுத்து வரவும். பாஸ்போர்ட் அளவிலான, 6 புகைப்படங்கள் வேண்டும். கல்லுாரி கட்டண தொகை செலுத்த வேண்டும்.அசல் மாற்று–ச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வரவும்.

    இம்முறை அரசு கலை கல்லுாரிகளில் தமிழகத்தில் முதல்முறையாக ரேங்கிங் பட்டியல் இக்கல்லுாரியில்தான் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதைபோல் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, காங்கயம் கலை அறிவியல் கல்லுாரிகளில் வரும் 8ம் தேதி கலந்தாய்வு துவங்கப்பட உள்ளது. ஊரடங்கிற்கு பின் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த முறை, 4 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கண்ணா கல்லுாரியில் சேர விண்ணப்பித்த நிலையில் இம்முறை, 6 ஆயிரத்து, 119 பேரின் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் 4 ஆயிரத்து, 42 விண்ணப்ப–ங்கள் பெறபட்டுள்ளதாகவும், கடந்தாண்டை விட ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் இந்த ஆண்டு பி. காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

    Next Story
    ×