search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் பலத்த மழை
    X

    சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம். 

    தாராபுரத்தில் பலத்த மழை

    • சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது
    • இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.

    தாராபுரம்

    தாராபுரம் பகுதியில் சில தினங்களாக மேகமூட்டம் ஏற்பட்டு மாலையில் மேகம் கலைந்து செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் 3 மணிக்கு மேல் கருமேகம் சூழ்ந்து ஜில்லென குளிர்காற்று வீச தொடங்கியது. சிறிது நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழை மெல்ல தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக பொழிந்தது.

    மழை மாலையில் 4மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை சூறாவளி காற்றுடன் பெய்தது. இந்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.குறிப்பாக அலங்கியம் சாலையில் மழை நீர்தேங்கியது. அந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    அதே போல் மூலனூர், போளரை, கரையூர் பகுதியிலும் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழையால் கால்நடைகளுக்கு போதுமான புற்கள் காடுகளில் வளர தொடங்கி விடும் என்றும், இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் இருந்த நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் வெயில் குறைந்து இதமான காலநிலை நிலவியதுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் உஷ்ணத்தில் தவித்த மக்கள் உற்சாகமடைந்தனா்.

    பின்னா் இரவு 7 மணியளவில் பெய்ய தொடங்கிய சாரல் மழை சுமாா் அரை மணி நேரம் பெய்தது.

    Next Story
    ×