என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடும்பம் நடத்த மனைவியை அனுப்பி வைக்காததால் மாமனாரை அடித்து கொன்றேன் - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
- மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் :
மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்