search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் சிறுவன் மாயம் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி  தேடும் பணி தீவிரம்
    X

    கோப்புபடம்.

    காங்கயத்தில் சிறுவன் மாயம் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி தேடும் பணி தீவிரம்

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    Next Story
    ×