என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு ரோட்டரி முன்னாள் தலைவர் கே.பாலசுப்ரமணியம் பேசிய காட்சி.
நடுவேலம்பாளையம் அரசு பள்ளியில் சீரமைக்கப்பட்ட 3 வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு
- கனிமம் மற்றும் சுரங்கம் 2022-23 திட்டத்தின் கீழ் வகுப்பறைகள் சீரமைக்கப்பட்டது.
- அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் நடுவேலம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கனிமம் மற்றும் சுரங்கம் 2022-23 திட்டத்தின் கீழ் மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் சீரமைப்பு செய்து திறப்புவி ழா நடைபெற்றது. விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.என்.பிருந்தா தலைமை தாங்கினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கத்தலைவர் தலைவர் பி.சண்முகசுந்தரம் வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னாள் மேற்கு ரோட்டரி சங்கத்தலைவர் கே.பாலசுப்பிரமணியம் திறப்பு விழா செய்யப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






