என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழ்பவானி பாசன கால்வாயில் பா.ஜ.க. விவசாய அணி தலைவர் ஆய்வு
- அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு துவக்கிவைத்தாா்
- சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே கீழ்பவானி பாசனக் கால்வாய் புனரமைப்பு செய்வது குறித்து பா.ஜ.க. சாா்பில் ஆய்வு செய்யும் பணி தொடங்கப்பட்டது. முத்தூா் மங்களப்பட்டியில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் இதனை தொடங்கி வைத்தாா்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசால் ரூ.940 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிரதமா் மோடி இதனை துவக்கிவைத்தாா்.ஆனால், சில விவசாய சங்கங்கள் சாா்பில் கால்வாய்களுக்கு கான்கிரீட் தளம் போடக்கூடாது என எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் நடந்த தோ்தல் பிரசாரத்தில் விவசாயிகளின் கருத்தறிந்து திட்டம் நிறைவேற்றப்படும் என தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
விவசாயிகளின் மற்றொரு தரப்பினா் கால்வாய்களுக்கு கான்கிரீட் போட வேண்டும் என்றனா்.இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் மங்களப்பட்டி முதல் அரச்சலூா் வரை மதகுகள், கரைகள் எப்படி இருக்கிறது என்பது குறித்துநேரடியாக ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கருத்துக்களைக் கேட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்படும் என்று பா.ஜ.க.வினா் தெரிவித்தனா்.