search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேச்சு
    X

    ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேச்சு

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது
    • தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. தமிழகத்தில் விஷசாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க.ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளசாராயம், போலி மது, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் நலிவடைந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 4-வது திட்ட குடிநீரை செயல்படுத்தினால் அ.தி.மு.க. அரசுக்கு பெயர் கிடைத்து விடும் என்று காலதாமப்படுத்துகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×