search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவரை கொன்று புதைத்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு
    X

    ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டியன்.

    பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவரை கொன்று புதைத்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை - திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பு

    • வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
    • செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம், பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி ராக்கப்பன் (வயது 41). இவரின் 2-வது மனைவி ஜெயலட்சுமி, (30). முதல் மனைவியின் மகன் அருண்பாண்டியன் (19)

    இந்த நிலையில் தண்ணீர் பந்தல் காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருவரசு (26) ராக்கப்பனுடன் நெருங்கி பழகிவந்தார். அப்போது ஜெயலட்சுமியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராக்கப்பன்கடந்த 2014 ஏப்ரலில் போன் செய்து திருவரசுவை தன் வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த அவரை சுத்தியலால் தாக்கியும், முகத்தை தலையணையால் அழுத்தியும் ராக்கப்பன், ஜெயலட்சுமி, அருண்பாண்டின் ஆகியோர் சேர்ந்து கொலை செய்து, வீட்டில் ஒரு பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.திருவரசுவைக் காணவில்லை என அவரது தம்பி இளையராஜா அளித்த புகாரின்படி, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்த போது, இந்த கொலை தெரியவந்தது.கொலை தொடர்பாக 3பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார்.இதில் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் 3பேரும் ேகாவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×