என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பல்லடத்தில் மதுபானம் விற்றவர் கைது
- சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் குட்டை பகுதியில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பல்லடம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராமன் (வயது 34) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






