search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் வாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்றவர் கைது
    X

    கோப்புபடம்.

    பல்லடத்தில் 'வாட்ஸ் அப்' மூலம் லாட்டரி விற்றவர் கைது

    • கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வங்கி கணக்கை போலீசார் முடக்கினர்.

    பல்லடம் :

    வாட்ஸ்அப்' வாயிலாக, லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை பல்லடம் போலீசார் கைது செய்து சிறையில், அடைத்தனர். பல்லடம் அருகே கணபதிபாளையம் - சென்னிமலைபாளையத்தை சேர்ந்த கங்காதரன் மகன் சரவணன், 55. இவர், கேரள மாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், 'வாட்ஸ் அப்' மூலம் கேரள மற்றும் மூன்றாம் நெம்பர் லாட்டரி விற்பனையும், 'கூகுள் பே' வாயிலாக, பண பரிவர்த்தனையும் மேற்கொண்டது தெரிந்து, இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2 மொபைல் போன், கேரள லாட்டரி, 20 மற்றும் 1,300 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வங்கி கணக்கையும் போலீசார் முடக்கினர்.

    Next Story
    ×