என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மத்திய, மாநில காப்பீட்டு திட்டங்களின் மூலம் 5,504 பேருக்கு ரூ.5½ கோடியில் மருத்துவ சிகிச்சைகள் - கலெக்டர் தகவல்
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கிபேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 ஆயிரத்து 504 பேர் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி அறிய 14555 அல்லது 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகள், 151 வகையான தொடர் சிகிச்சைகள், 38 வகையான பரிசோதனைகள், மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, காது நுண்திறன் கருவி பொருத்துதல் என உயர்ரக சிகிச்சைகளும் அடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.
இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5 பேருக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.