search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் உழவர்சந்தையில் அதிகாலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு - விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
    X

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அருகில் கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் , செல்வராஜ் எம்.எல்.ஏ. மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி உள்ளனர். 

    திருப்பூர் உழவர்சந்தையில் அதிகாலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு - விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    • அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும்.
    • அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும் . இதில் காய்கறிகளை வாங்க திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தெருவிளக்கு , குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட செய்தித்துறை அமைச்சர் பொதுமக்களிடமும் அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் தென்னம்பாளையம் உழவர் சந்தை அலுவலகத்தில் ஆய்வு செய்ததுடன் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ஆகியவற்றையும் கேட்டறிந்தார் .

    இந்த ஆய்வின் போது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , மாவட்ட கலெக்டர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×