என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூா் கல்வி மாவட்டத்தில் 1,663 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
- ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.
- 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூா் கல்வி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பள்ளிகளில் பயிலும் 1,663 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருப்பூா் கல்வி மாவட்டத்தில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, பிஷப் உபகரசாமி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மொரட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூரியப்பம்பாளையம் செ.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.85.40 லட்சம் மதிப்பில் 1,663 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி உளளிட்ட பலா் கலந்து கொண்டனா்.