என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரடிவாவியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
- ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
- 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே கரடிவாவியில் எஸ்.என்.எம்.எல். மேல்நிலை பள்ளியில் 245 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், பல்லடம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் அம்சவேணி வரவேற்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் 245 மாணவிகளுக்கு,ரூ.12.23 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி விழா சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன், மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி, மற்றும் என்.எஸ்.எஸ்.மாவட்ட அலுவலர் முருகேசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிற்பி செல்வராஜ், செம்மிபாளையம் திருமூர்த்தி, கீர்த்தி சுப்பிரமணியம், இளைஞரணி ராஜேஸ்வரன், மற்றும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.