என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அலகுமலையில் 25-ந் தேதி ஜல்லிக்கட்டு அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்
- மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
- 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.
வீரபாண்டி :
பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.
அதன்படி கலெக்டர் மற்றும் சப்- கலெக்டர் ஆகியோர் ஆய்வின் முடிவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டி போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. பார்வையாளர்கள் அமர்வதற்கான கேலரி, வாடிவாசல் மற்றும் போட்டியில் கலந்து கொண்டபின் செல்லும் மாடுகளை பிடிப்பதற்கான இடம் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தது. நாளை 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதையொட்டி மாடு பிடி வீரர்கள் முன்பதிவு தீவிரமாக நடைபெற்றது. இதில் சுமார் 450 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு பாதுகாப்புக்கான போலீசார் பற்றாக்குறை ஏற்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வைத்த கோரிக்கையை ஏற்று மாவட்ட கலெக்டர் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களினால் 23-ந் தேதி நடத்தப்படவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியை வேறு ஒரு தேதியில் நடத்துவதற்கு ஏதுவாக மாற்று தேதி மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அதில் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 23-ந் தேதி நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 25-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் என அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி தெரிவித்தார். போட்டியினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் ஆதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் அல–கு–மலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்