என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே தண்ணீர் திருட்டை தடுக்க கோரி மனு
- என்னுடைய விவசாய கிணற்று அருகே வசிக்கும் ஒரு தரப்பினர் கிணற்றை ஆக்கிரமிக்க முயன்றனர்.
- எதிர் தரப்பினர் இரவு நேரங்களில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீரை திருடி அவர்கள் நிலத்திற்கு பாய்ச்சிகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் தலுஞ்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 87). இவர் தனது மனைவி சிவபாக்கியத்துடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் பகுதியில் எனக்குச் சொந்தமான 1.96 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.
இதில் தென்னை மரங்கள் வளர்த்து விவசாயம் செய்து வருகிறேன். இந்த நிலையில் என்னுடைய விவசாய கிணற்று அருகே வசிக்கும் ஒரு தரப்பினர் கிணற்றை ஆக்கிரமிக்க முயன்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர் தரப்பினர் இரவு நேரங்களில் விவசாய கிணற்றிலிருந்து தண்ணீரை திருடி அவர்கள் நிலத்திற்கு பாய்ச்சிகின்றனர். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுகின்றனர். எனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் கிணற்றிலிருந்து தண்ணீரை திருட்டுத்தனமாக எடுப்பதை தடுக்க வேண்டும். மேலும் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.