என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பல்லடம் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் - எம்.எஸ்.எம்.. ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார் பல்லடம் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் - எம்.எஸ்.எம்.. ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/29/1906582-untitled-1.webp)
அங்கன்வாடி கட்டிடத்தை எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தக் காட்சி.
பல்லடம் அருகே புதிய அங்கன்வாடி கட்டிடம் - எம்.எஸ்.எம்.. ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதிய கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
- மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ரூ.11.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்கன்வாடி மையகட்டடம் பழுதடைந்து இருந்ததால் புதிய கட்டிடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., ரூ.11.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தந்தார். அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடத்தை எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னப்பன்,பிரேமா பழனிச்சாமி, மற்றும் தண்ணீர் பந்தல் நடராஜன், பானு பழனிச்சாமி, கோகுல், கோவிந்தராஜ், சிவப்பிரகாஷ், மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.