search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய மின் இணைப்பு- பெயர் மாற்ற சிறப்பு முகாம்
    X

    கோப்பு படம்.

    புதிய மின் இணைப்பு- பெயர் மாற்ற சிறப்பு முகாம்

    • மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் பகுதியில் புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு 24-ந்தேதி வரை அந்தந்த மின்சார வாரிய அலுவலகங்களில் நடைபெற உள்ளது.இது குறித்து தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற் பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் பகுதியில் மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் ஆகியவை குறித்து மின் நுகர்வோருக்கான சிறப்பு முகாம் கடந்த 24-ந்தேதி முதல் வருகிற ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு அலுவலக நேரத்தில் காலையில் 9 மணி முதல் 5 மணி வரை அலுவலக நேரங்களில் நடைபெற உள்ளது.

    மின் நுகர்வோர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய மின் இணைப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உரிய கீழ்கண்ட ஆவணங்களை அந்தந்த மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய ஆதார் அட்டை நகல், நகராட்சி மற்றும் மாநகராட்சியில் சமீபத்தில் செலுத்திய சொத்துவரி ரசீது நகல், விற்பனை பத்திரத்தின் நகல் அல்லது நீதிமன்ற ஆணை, மின் உரிமையாளர் இறந்திருப்பின் அவற்றின் பெயர் மாற்றம் செய்ய கொடுக்க வேண்டிய ஆவணங்கள், ஆதார் அட்டை, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் புதிதாக சொத்து வரி செலுத்திய ரசீது நகல், நகராட்சி அல்லது மாநகராட்சி பகுதிகளுக்கு ஏதேனும் ஒரு நகலை சமர்ப்பிக்கலாம்.

    குழு இணைப்புகளில் பொது சேவைக்கான மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள், பில்டர்கள், டெவலப்பர்கள் பெயரில் இருக்கும் பல குடியிருப்புகள், குடியிருப்பு வளாகங்கள், குரூப் ஹவுசிங்கில் உள்ள பொது சேவைக்கான மின் இணைப்புகளுக்கு பெயர் மாற்றம் செய்ய நலவாழ்வு சங்கத்தின் பதிவு சான்று, அப்பார்ட்மெண்ட் பெயருக்கு மாற்ற விண்ணப்பத்தில் கையொப்பமிட்ட குடியிருப்போரிடம் அனுமதி கடிதம் இவற்றுடன் ரூ.726-ஐ செலுத்தி பெயர் மாற்றம் செய்து பயனடையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×