என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரம் ஜமாபந்தியில் 308 பேர் மனு
- பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை–கள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர்.
- வட்ட வழஙகல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாராபுரம்:
தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில் கன்னிவாடி, தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர். அதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஒரு சில மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஷ், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.