என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மடத்துக்குளத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி மாதம் 6-ந்தேதி நடக்கிறது
- குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
- அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளத்தில் குவாரிகள் அமைக்க ஜனவரி 6ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து பல்லடத்தில் உள்ள திருப்பூா் மாவட்ட ( தெற்கு) மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளா் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமம் க.ச.எண் 688, 689, 657 ஆகிய இடங்களில் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குழுமம் சாா்பில் 10.98 ஹெக்டோ் பரப்பளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஜனவரி 6ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உண்மை விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளதால் கல்குவாரி குறித்த கருத்துகேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும் என நேர்மை மக்கள் இயக்கம் திருப்பூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மடத்துக்குளம் தாலுகா, மைவாடி கிராமத்தில் தனியார் கல்குவாரி குறித்த கருத்து கேட்பு கூட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லை. 176 பக்க அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால், குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களால் எவ்வாறு புரிந்துகொண்டு, கருத்து தெரிவிக்க முடியும்.
கல்குவாரிகளால் என்னென்ன சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்கும். அதை எவ்வாறு சரி செய்வார்கள் என்கிற அறிக்கை தாய்மொழியில் இருந்தால்தான் மக்கள், அதனை புரிந்துகொண்டு தங்கள் கருத்து தெரிவிக்க முடியும்.
சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தமிழில் இல்லாததாலும், உண்மை விவரங்கள் மறைக்கப்படுவதாலும் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்யவேண்டும். அறிக்கைகளை தமிழில் தயாரித்த பின்னரே கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்