search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
    X

    கோப்புபடம். 

    தாராபுரம் பகுதி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

    • குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது.
    • தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    தாராபுரம்:

    கோடை வெயிலின் தாக்கத்தால் அமராவதி ஆறு வறண்டு போனது. அதனால் குடிநீர் கிணற்றின் தண்ணீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே தினசரி நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி 30 வார்டுகளுக்கு தங்கு தடையின்றி தினசரி வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த சில தினங்களாக 15 வார்டுகளுக்கு ஒரு நாளும், அடுத்த 15 வார்டுகளுக்கு மறுநாளும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் குடிநீர் தேவையை போக்கும் வகையில் அமராவதி ஆற்றில் உள்ள கிணற்றை தூர்வார லாமா?அல்லது புதிய கிணற்றை அமைக்கலாமா? என்ற நோக்கில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் முன்னெச்சரிக்கையாக நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து அவர் கூறுகையில் "தென்–மேற்கு பருவ மழை வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது. இவைதொடங்கினால் மட்டுமே அமராவதி அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. அப்போது தான் நகராட்சி நிர்வாகம் தங்கு தடையின்றி வழக்கம் போல தண்ணீர் வினியோகம் செய்ய முடியும். அதுவரை நகராட்சி நிர்வாகம் வினியோகிக்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.

    Next Story
    ×